ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலி
ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். புதருக்குள் பிணமாக கிடந்த அவரை போலீசார் மீட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மலைப்பகுதி என்பதால், இங்குள்ள சாலைகள் அனைத்தும் ஏற்ற, இறக்கங்களாகவே உள்ளன. மலைப்பாதையில் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது ஒலி எழுப்ப வேண்டும். வாகனங்களை முந்தி செல்லக்கூடாது, கீழ் இருந்து மேல்நோக்கி வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும். மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் சாலையோரத்தில் ஆங்காங்கே தகவல் பலகைகளை வைத்து உள்ளனர். இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஊட்டியில் இருந்து குன்னூரை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. லாரியை லவ்டேல் அன்பு அண்ணா காலனி பகுதியை சேர்ந்த டிரைவர் சசிகுமார் (வயது 23) என்பவர் ஓட்டினார். அதே பகுதியை சேர்ந்த முத்து (24) கிளனராகவும், அவர்களுடன் சதீஷ் (23) என்பவரும் உடனிருந்தார். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகவில்லை. ஊட்டி-குன்னூர் சாலையில் மைனாலா சந்திப்பு பகுதியில் முன்னால் சென்று கொண்டு இருந்த ஒரு வாகனத்தை, டிரைவர் சசிகுமார் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 500 அடி பள்ளத்தில் லாரி உருண்டோடி விழுந்தது.
பள்ளத்தில் கவிழ்ந்த லாரி பாரதிநகரில் உள்ள கட்டிட தொழிலாளி சிவராஜ் (48) என்பவரது வீட்டின் மீது விழுந்தது. லாரி விழும் போது, வீட்டில் உள்ளவர்கள் மற்றொரு அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கேத்தி போலீசார் மற்றும் ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவர் உள்பட 3 பேரையும் தேடினர். இந்த மீட்பு பணியில் சதீஷ், முத்து ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்கள் இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் சசிகுமாரை தேடும் பணி நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நீடித்தது. ஆனால், அவர் மீட்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதி மக்கள் புதர்களுக்கு நடுவே ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தது லாரி டிரைவர் சசிகுமார் என்பதும், லாரி பள்ளத்தில் உருண்டோடி வீட்டின் மீது விழும்போது அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு புதரில் விழுந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
லாரி வீட்டின் மீது விழுந்ததால், வீட்டில் உள்ள 2 படுக்கை அறைகள், சமையல் அறை, கழிப்பறை உடைந்து விழுந்தன. வீட்டில் இருந்த சமையல் உபகரணங்கள், மின் உபயோக பொருட்கள் உடைந்தன. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. ஊட்டி-குன்னூர் சாலையில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். தடுப்புச்சுவர் உடைந்த இடத்தில் போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story