ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் 2-வது நாளாக மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மாணவ-மாணவிகள் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கல்லூரியின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மாணவ-மாணவிகளின் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காலை 10 மணிஅளவில் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு முன்பு திரண்டனர். அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் மாணவ-மாணவிகளின் மீது போலீசார் அடக்குமுறையை ஏவக்கூடாது.
போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவ-மாணவிகளை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைககள் அடங்கிய வாசகங்களை கையில் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
மதியம் 1 மணி வரை சுமார் 3 மணிநேரம் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி வீரப்பன்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story