எய்ட்ஸ் நோயாளிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேச்சு
எய்ட்ஸ் நோயாளிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:–
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் எய்ட்ஸ் மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான்.
எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும், அதற்கு மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும்.
குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், தனியார் மருத்துவமனை, நடமாடும் நம்பிக்கை மையம் என 51 இடங்களில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
மேலும் 3 சுகவாழ்வு மையங்களும், 2 அரசு ரத்த சேமிப்பு வங்கிகளும், ஒரு கூட்டு மருத்துவ சிகிச்சை மையமும், 2 தொண்டு நிறுவனங்களும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசினார்.
இந்த நிகழ்ச்சியின்போது குமரி மாவட்டத்தில் 2,283 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அவர்களில் 1,255 பேர் ஆண்கள், 951 பேர் பெண்கள், 7 பேர் திருநங்கைகள், 36 பேர் ஆண் குழந்தைகள், 34 பேர் பெண் குழந்தைகள் என்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கியது. இதனை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ, மாணவிகள், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலக பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. அங்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் வசந்தி, துணை இயக்குநர்கள் மதுசூதனன் (சுகாதாரப் பணிகள்), கிரிஜா (தொழுநோய்), மாவட்ட திட்ட மேலாளர் (எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஸ்டெல்லா ஜெனட் உள்பட பலர் கலந்து கொணடனர்.

Related Tags :
Next Story