நிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே நிச்சயதார்த்தம் செய்து விட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் வாலிபரின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இந்திரன் (வயது 50). விவசாயி. இவருடைய மகள் ரம்யா (20) நர்சிங் படித்துள்ளார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான மாதவன் மகன் மதன்ராஜ் (23). இவர் கோவையில் உள்ள கம்பெனியில் வேலைபார்க்கிறார். இந்தநிலையில் மதன்ராஜூக்கும், ரம்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 16.7.2017 அன்று உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் வருகிற 11-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் மணமகள் ரம்யாவுடன் பேசுவதை மதன்ராஜ் திடீரென நிறுத்தினார். இதனால் பதற்றம் அடைந்த ரம்யா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதன்ராஜ் வீட்டிற்கு சென்று இதுதொடர்பாக கேட்டுள்ளனர். அதற்கு மதன்ராஜ் குடும்பத்தினர் மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடிக்கவில்லை. இதனால் இந்த திருமணம் நடக்காது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா குடும்பத்தினர் மதன்ராஜை திருமணம் செய்து வைக்க கோரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ரம்யா திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் மதன்ராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பல முறை உல்லாசம் அனுபவித்து விட்டு தற்போது திருமணத்திற்கு மறுக்கிறார். எனவே மதன்ராஜை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) இனிக்கோதிவ்யன், இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலா ஆகியோர் மதன்ராஜ், அவரது தந்தை மாதவன், தாய் மஞ்சுளா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் மதன்ராஜை கைது செய்து, திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story