விண்ணப்பதாரர்கள் பற்றிய விவரங்களை ‘எம்.பாஸ்போர்ட் போலீஸ் செயலி’ மூலம் சரிபார்க்கும் திட்டம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 30 போலீஸ் நிலையங்களிலும் விண்ணப்பதாரர்கள் பற்றிய விவரங்களை எம்.பாஸ்போர்ட் போலீஸ் செயலி மூலம் சரிபார்க்கும் திட்டத்தை சூப்பிரண்டு சிபாஷ் கல்யாண் தொடங்கி வைத்து உள்ளார்.
திருச்சி,
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் விண்ணப்ப மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு போலீஸ் விசாரணை முடிந்த பின்னரே பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் பாஸ்போர்ட் வழங்கப்படுவது மரபு. இந்த முறையில் ஒருவர் பாஸ்போர்ட் பெறுவதற்கு 20 முதல் 25 நாட்கள் வரை ஆவதால் போலீஸ் விசாரணையை கால தாமதம் இன்றி துரிதப்படுத்துவதற்காக ‘எம்.பாஸ்போர்ட் போலீஸ் செயலி’ என்ற திட்டம் தமிழகம் முழுவதும் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.
திருச்சி மாநகர பகுதி தவிர புறநகர் பகுதியில் உள்ள 30 போலீஸ் நிலையங்களிலும் இந்த புதிய திட்டம் நடை முறைக்கு வந்து உள்ளது. இதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ‘மொபைல் டேப்லட்’ வழங்கப்பட்டு, அவற்றை கையாள்வதற்கான பயிற்சியும் போலீசாருக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஷ் கல்யாண் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள 30 போலீஸ் நிலையங்களிலும் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் 5 நாட்களில் சரிபார்த்து ஆன்லைனில் அனுப்பப்படும். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும்’ என்றார்.

Related Tags :
Next Story