பயணிகளின் வசதிக்காக சென்னை புறநகர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பயணிகளின் வசதிக்காக சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் புறநகர்களுக்கு பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* வேளச்சேரி-சென்னை கடற்கரை பயணிகள் சிறப்பு ரெயில், வேளச்சேரியில் இருந்து காலை 9.55, 11.45 மற்றும் மதியம் 1.30, 3.15 மணிக்கு புறப்படும்.
* சென்னை கடற்கரை-வேளச்சேரி பயணிகள் சிறப்பு ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.50 மற்றும் மதியம் 12.35, 2.20, 4.10 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
* சென்னை கடற்கரை-அரக்கோணம் பயணிகள் சிறப்பு ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.
* அரக்கோணம்-சென்னை கடற்கரை பயணிகள் சிறப்பு ரெயில், அரக்கோணத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3.15 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
செங்கல்பட்டு
* தாம்பரம்-செங்கல்பட்டு பயணிகள் சிறப்பு ரெயில், தாம்பரத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும்.
* செங்கல்பட்டு-சென்னை கடற்கரை பயணிகள் சிறப்பு ரெயில், செங்கல்பட்டில் இருந்து காலை 9.25, மதியம் 1.15 மற்றும் மாலை 5.15 மணிக்கு புறப்படும்.
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பயணிகள் சிறப்பு ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.15 மற்றும் மதியம் 3.08 மணிக்கு புறப்படும்.
* சென்னை கடற்கரை-தாம்பரம் பயணிகள் சிறப்பு ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.30, 9.55 மணிக்கு புறப்படும்.
* தாம்பரம்-சென்னை கடற்கரை பயணிகள் சிறப்பு ரெயில், தாம்பரத்தில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்படும்.
மூர்மார்க்கெட்
* சென்னை மூர்மார்க்கெட்-திருவள்ளூர் பயணிகள் சிறப்பு ரெயில், சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும்.
* திருவள்ளூர்-மூர்மார்க்கெட் பயணிகள் சிறப்பு ரெயில், திருவள்ளூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படும்.
* மூர்மார்க்கெட்-ஆவடி பயணிகள் சிறப்பு ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 1.35 மற்றும் 3.20 மணிக்கு புறப்படும்.
*ஆவடி-மூர்மார்க்கெட் பயணிகள் சிறப்பு ரெயில், ஆவடியில் இருந்து மதியம் 2.25 மற்றும் மாலை 4.15 மணிக்கு புறப்படும்.
இந்த ரெயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story