பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன் மகளுடன் கைது
பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதுடன், போலி நிறுவனங்கள் நடத்தியும் கல்யாண மன்னன் மோசடி செய்துள்ளார். இதற்கு அவருடைய மகளும் உடந்தையாக இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
கோவையை சேர்ந்த குமுதவள்ளி, சென்னை கல்லூரி பேராசிரியை இந்திராகாந்தி உள்பட 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த கோவை வெள்ளலூரை சேர்ந்த கல்யாண மன்னன் புருசோத்தமன் (வயது50), அவருடைய மகள் கீதாஞ்சலியுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புருசோத்தமனின் மோசடி குறித்து கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புருசோத்தமன், கோவை காந்திபுரத்தில் உள்ள மெட்டிஒலி திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளார். அவர், மிகப்பெரிய தொழில் அதிபர் என்றும், 27 லாரிகள் ஓடுவதாகவும், பல இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்கள் இருப்பதாகவும் மனைவி இறந்து போனதால் மகளை கவனிப்பதற்காக திருமணம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
கோடீஸ்வர பெண்கள், திருமண தகவல் மையத்தை தொடர்பு கொள்ளும்போது, திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகனன், அவருடைய மனைவி வனஜா குமாரி ஆகியோர் புருசோத்தமனை அறிமுகம் செய்துள்ளனர். கோடீஸ்வர பெண்கள், புருசோத்தமனிடம் பழகும்போது, ஆரம்பத்தில் நன்கு பழகியுள்ளார். பின்னர் மகள் கீதாஞ்சலி மூலம் மோசடி செய்தார். தனது வீடு ஏலத்திற்கு வருவதாகவும், தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும், தன் மீதான ஒரு வழக்கில் வெற்றி பெற்றால் ரூ.17 கோடி வரும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி ஒரு பெண் 850 பவுன் தங்க நகை, மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார். இதுதவிர மற்றொரு பெண்ணை பணம் மற்றும் நகையை பறித்து அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
புருசோத்தமன், வசதியற்ற ஆதரவற்ற பெண்களை தேர்வு செய்து அவர்களது பெயரில் போலி நிறுவனங்களை தொடங்கியுள்ளார். அவர் களது பெயரிலேயே வங்கி கணக்கு தொடங்கி, காசோலை பெற்று, அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருப்பதாக விசிட்டிங் கார்டுகள் தயாரித்து, பல நிறுவனங்களில் அப்பாவி பெண்கள் பெயரில் பொருட்கள் கொள்முதல் செய்து, அந்த பொருட்களை வேறு நபர்களுக்கு விற்றுவிட்டு பணத்தை சுருட்டிக்கொண்டு புருசோத்தமன் தலைமறைவாகி விடுவார். இவர் மீது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், கடலூர் மற்றும் பஞ்சாப், மராட்டியம், மேற்கு வங்காளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பத்தாவது வகுப்புவரை மட்டுமே படித்துள்ள இவர், கணினி பயிற்சி பெற்று, ஆன்லைன் மூலம் கொள் முதல் செய்வதாக கூறி நூல் வியாபாரிகளையும் ஏமாற்றி பணம் சம்பாதித்துள்ளார்.
8 பெண்களை திருமணம் செய்த இவர், அந்த பெண்களுடன் ஒரு சில மாதங்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு, பணம், நகைகள், விலை உயர்ந்த பொருட்களை சுருட்டிவிட்டு தலைமறைவாகி விடுவார். இதுவரை ரூ.5 கோடிக்கும் மேல் பணம் மோசடி செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகிறது.
இந்த மோசடிக்கு அவருடைய மகள் கீதாஞ்சலி பல்வேறு வகைகளில் உடந்தையாக இருந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். இவர் கள் மீது கூட்டுச்சதி, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தந்தையும், மகளும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா, கல்யாண மன்னன் புருசோத்தமனை கைது செய்த போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் மசூதா பேகம், கணேஷ், கோபி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ஞான சேகரன், காசி பாண்டியன் ஆகியோரை பாராட்டினார்.

Related Tags :
Next Story