மாதவரம் பால்பண்ணையில் உள்ள ஆவின் பூங்காவில் அத்துமீறும் கள்ளக்காதல் ஜோடிகள்


மாதவரம் பால்பண்ணையில் உள்ள ஆவின் பூங்காவில் அத்துமீறும் கள்ளக்காதல் ஜோடிகள்
x
தினத்தந்தி 2 Feb 2018 4:45 AM IST (Updated: 2 Feb 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

மாதவரம் பால்பண்ணையில் உள்ள ஆவின் பூங்காவில் அத்துமீறும் காதலர்கள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகளால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணையில் தயாரிக்கப்படும் பால், தயிர், பால்கோவா, நெய், மோர், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள், பால் சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் ஆகிய பொருட்களை விற்பனை செய்ய மாதவரம் பால்பண்ணை பால் சுத்திகரிப்பு நிலையம் அருகே ஆவின் பாலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த பாலகத்தையொட்டி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலகத்தில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதற்காக வரும் பொதுமக்கள், அருகில் அமைந்துள்ள இந்த பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்து செல்வார்கள்.

அத்துமீறும் கள்ளக்காதல் ஜோடிகள்

பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்காக விளையாட்டு சாதனங்கள், பொதுமக்கள் பார்வையிட மீன் தொட்டிகள் உள்ளன. ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்த பூங்கா மற்றும் அங்குள்ள மீன் தொட்டிகள், சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்டவைகளை ஆவின் நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த பூங்காவில் காதல் ஜோடிகளும், கள்ளக்காதல் ஜோடிகளும் ஆங்காங்கே அமர்ந்து செய்யும் லீலைகள் பூங்காவுக்கு வரும் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. சில நேரங்களில் கள்ளக்காதலர்கள் அத்துமீறும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதால் குழந்தைகளுடன் பூங்காவுக்கு வரும் பெற்றோர், தர்ம சங்கடத்துக்கு ஆளாகின்றனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இது குறித்து ஆவின் நிர்வாகத்திடமும், மாதவரம் பால்பண்ணை போலீசாரிடமும் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பூங்காவை நவீனப்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முறையாக பராமரிக்க வேண்டும்.

இதுபோல் பூங்காவுக்கு வருபவர்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறி நடந்து கொள்பவர்களை தடுத்து நிறுத்துவதுடன், சமூக விரோத செயல்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story