ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி சிக்கியது 2 பேர் கைது


ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி சிக்கியது 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2018 4:00 AM IST (Updated: 2 Feb 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே சென்னையில் இருந்து மினி டெம்போவில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சந்தேகத்திற்கு இடமான மினி டெம்போவை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.

2 பேர் கைது

அதில் தலா 50 கிலோ எடைகொண்ட 35 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் மேற்கண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

டெம்போ டிரைவரான எளாவூரை அடுத்த பெரியஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) மற்றும் டெம்போ உரிமையாளரான நெல்லூரை சேர்ந்த அஜித் (23) ஆகியோரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். 

Next Story