உரிமம் இல்லாத ஆட்டோக்களை ஒழிக்க புதிய திட்டம் போக்குவரத்துதுறை அதிகாரி தகவல்
உரிமம் இன்றி சட்டவிரோதமாக இயக்கப்படும் ஆட்டோக்களை ஒழிக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக மாநில போக்குவரத்து துறை அதிகாரி கூறினார்.
மும்பை,

புதிய திட்டம்
மும்பை, தானே மற்றும் நவிமும்பையில் அதிக ஆட்டோக்கள் உரிமம் இன்றி சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை பெருநகரத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் ஆட்டோக்கள் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக இயக்கப்படும் ஆட்டோக்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் உரிமம் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்களை ஒழிக்க மாநில அரசு புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது.
எரிபொருள் வழங்கப்படாது
இதுகுறித்து மாநில போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
உரிய உரிமத்துடன் இயங்கும் அனைத்து ஆட்டோக்களிலும் ‘க்யு.ஆர். கோடு’ ஸ்டிக்கர் ஒட்டப்படும். அந்த ‘க்யு.ஆர். கோடில்’ ஆட்டோவின் ஆயுள்காலம், உரிமையாளர் பெயர், முகவரி போன்ற விவரங்களை பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த ‘க்யு.ஆர் கோடுடன்’ வரும் ஆட்டோக்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்குகளில் சி.என்.ஜி. கியாஸ் போடப்படும். இல்லாமல் வரும் ஆட்டோக்களுக்கு சி.என்.ஜி. போடப்படாது. எரிபொருள் மறுக்கப்படும் போது உரிய உரிமம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் தன்னால் ஒழியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மும்பை ஆட்டோ டிரைவர்கள் சங்க தலைவர் கூறுகையில் “ இந்த திட்டம் மூலம் சட்டவிரோத ஆட்டோக்கள் ஒழிந்து விடும். அதேநேரத்தில் ஓட்டுனர் லைசென்ஸ் இன்றி ஆட்டோ ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

Related Tags :
Next Story