அஞ்சல் தலையின் தோற்றம்
ஒரு காலத்தில் அஞ்சல் அலுவலகங்கள் பலருக்கு தெய்வங்களாகத் தெரிந்தன. அந்த அளவிற்கு தொலை தூரத்தில் இருக்கும், மகனோ அல்லது கணவனோ அப்பாவோ, அம்மாவோ என்று உறவுகளின் உணர்வுகளை சுமந்துவரும் கடிதங்கள் ஒவ்வொருவரின் கண்களுக்கும் காட்சி தர உதவிய துறை இதுதான் என்பது அனைவரும் அறிந்தது.
இன்றும் கடிதங்களின் வரவுகள் குறைந்துபோனாலும் அந்தக் கடிதங்களுக்கு இருக்கும் ஒரு குறைந்து போகாத சுவராஸ்யம் எந்த இணைய வளர்ச்சியிலும் இல்லை.
ஒரு நாட்டின், மாநிலத்தின் கலாசாரத்தை, வரலாற்றை, மக்களின் பழக்கவழக்கங்களை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் சரித்திர ஆதாரங்களாக தபால் தலைகள் திகழ்கின்றன. அரசியல் தலைவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் உருவம் பொறித்த தபால் தலைகள் உள்பட அனைத்து நாடுகளின் தபால் தலைகளும் ஒவ்வொரு வரலாற்றை சொல்கின்றன.
உலகத்தில் தோன்றிய மற்ற கண்டுபிடிப்புகளை விட இந்த தபால் தலை அறிமுகம் பல விவாதங்களுக்குப் பின்பே அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முதலில் இது ‘ஜேம்ஸ் சாமேர்ஸ்‘ என்பவரால் 1834-ம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837-ல் ‘ரோலண்ட் ஹில்‘ என்பவர், தபால் துறைச் சீரமைப்பின் முக்கியத்துவமும், செயற்படுதன்மையும்‘ என்னும் அறிக்கையில் வெளியிட்டார் . சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் முன்வைப்பு இறுதியாக 1839 ஆகஸ்டில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவலகம், முதன் முதலில் 1840-ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன், உலகின் முதல் உறைகளையும் வெளியிட்டது.
மூன்று மாதங்களின் பின்னர், விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட பென்னி பிளாக் என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால், அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துகளில் அவற்றில் பொறிக்கப்பட வேண்டுமென்ற மிகக் கடுமையான சட்டம் ஒன்றை உருவாக்கினார்கள். இந்த சட்டம் பல ஆண்டுகள் வரை யாராலும் எதிர்க்கப்படாமல் இருந்துவந்தது. அதன் பின் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் தலையீட்டால் இந்த சட்டம் சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது.
நம்மில் பலர் தபால்களில் ஸ்டாம்புகளை (அஞ்சல் வில்லை) ஒட்டும்பொழுது நாக்கில் வைத்து எச்சிலைத் தடவித்தான் ஒட்டி இருக்கிறோம். ஆனால் இந்த தகவலை அறிந்த பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பழைய பூட்ஸ்கள், செருப்புகளையெல்லாம் நெருப்பில் போட்டு, அதிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவிதப் பசையே ஸ்டாம்பின் பின்புறத்தில் தடவி இருக்கிறார்களாம், இன்று வரை ஸ்டாம்புகளின் பின் புறத்தில் இந்த முறைதான் கையாளப்படுகிறது. இனி எந்தப் பொருளையும் வாங்கி நாக்கில் வைப்பதற்கு முன்பு சற்று யோசிப்பது நல்லது.

Related Tags :
Next Story