விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டு தொகை
பரமக்குடி தாலுகா அரசடிவண்டலை சேர்ந்தவர் லதா.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா அரசடிவண்டலை சேர்ந்தவர் லதா. இவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார். இதையடுத்து அவருடைய குடும்பத்துக்கு நயினார்கோவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் பிரதம மந்திரியின் ஜீவன்ஜோதி பீமா யோஜனா திட்டத்தின்கீழ் இழப்பீட்டு தொகையாக ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் நடராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வங்கி முதன்மை மேலாளார் குணசேகரன், நயினார்கோவில் வங்கி மேலாளார் சிபு கலந்துகொண்டனர். பின்னர் வங்கி மேலாளர் சிபு கூறியதாவது:- ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் காப்பீட்டு வசதி பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் குறைவாக உள்ளது. குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தரத்தை சேர்த்தவர்கள் காப்பீட்டு பலனை பெறாமலேயே இருக்கின்றனர். அடித்தட்டு மக்கள் பயன்பெறும் விதமாக குறைந்த காப்பீட்டு தொகையில் மத்தியஅரசு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்அடிப்படையில் வருடத்திற்கு ரூ. 330 செலுத்தி பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின்கீழ் ரூ. 2 லட்சம் வாரிசுதாரர்கள் பெறலாம். வருடத்திற்கு வெறும் ரூ. 12 செலுத்தி பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் விபத்து ஏற்பட்டு இறப்பு நேரிட்டால் ரூ.2 லட்சம் பெறலாம், உடல் ஊனமுற்றால் ரூ. 2 லட்சம் வரை இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இதற்கு வங்கி கணக்கு அவசியம். இது அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்கும் விதமாக அமைத்து உள்ளது. பொது மக்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story