மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில்12 தாசில்தார்கள் இடமாற்றம் + "||" + In Nellai district 12 Thalistars transferred

நெல்லை மாவட்டத்தில்12 தாசில்தார்கள் இடமாற்றம்

நெல்லை மாவட்டத்தில்12 தாசில்தார்கள் இடமாற்றம்
நெல்லை மாவட்டத்தில் 12 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 12 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

தாசில்தார்கள் இடமாற்றம்

நெல்லை மாவட்டத்தில், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலகங்களில் ஒரு ஆண்டு பணி முடித்த தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தாசில்தார்கள் விவரம் வருமாறு:-


நெல்லை சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் மோகனா, மானூர் தாசில்தாராகவும், ஆலங்குளம் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் முகமதுபுகாரி, ராதாபுரம் தாசில்தாராகவும், நெல்லை மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் தங்கராஜ், கடையநல்லூர் தாசில்தாராகவும், சேரன்மாதேவி சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் லட்சுமி, திருவேங்கடம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மானூர் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் சொர்ணம், அம்பை தாசில்தாராகவும், மானூர் தாசில்தார் துரைப்பாண்டி, ஆலங்குளம் சமூகபாதுகாப்பு திட்டத்திற்கும், ராதாபுரம் தாசில்தார் ரவிக்குமார், மானூர் சமூகபாதுகாப்பு திட்டத்திற்கும், கடையநல்லூர் தாசில்தார் மாரியப்பன், நெல்லை சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

நதிநீர் இணைப்பு திட்டம்

திருவேங்கடம் தாசில்தார் ராஜூ, நெல்லை மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், அம்பை தாசில்தார் வெங்கட்ராமன், சேரன்மாதேவி சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும், ராதாபுரம் நதிநீர் இணைப்பு திட்டம் அலகு 6, நில எடுப்பு தனிதாசில்தார் கணேஷ்குமார், நாங்குநேரி ஆதிதிராவிடர் நலத்துறை தனித்தாசில்தாராகவும், நாங்குநேரி ஆதித்திராவிடர் நலத்துறை தனித்தாசில்தார் பத்மபிரியா, ராதாபுரம் நதிநீர் இணைப்பு திட்டம் அலகு 6, நில எடுப்பு தனிதாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.