மாவட்ட செய்திகள்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு + "||" + Dr. Sivanthi Adithanar Engineering College National level technical seminar

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
திருச்செந்தர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.

தொழில்நுட்ப கருத்தரங்கு

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ‘சாகோசியம்-2018‘ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ஒய்ஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். மாணவர் செந்தில் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.


தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி கட்டிடவியல் துறை உதவி பேராசிரியர் வெங்கடேசன் குத்துவிளக்கு ஏற்றி, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு திறனை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் பேச்சாற்றல், குழுவாக செயல்படுதல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், தொழில்திறனை வளர்த்தல், சுய மேலாண்மை, தொழில்நுட்ப மேம்பாடு, திட்டமிடல், புதிய தொழில்நுட்பங்களை கற்றல் போன்ற திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும். மாணவர்களின் ஆராய்ச்சி திட்டங்களுக்கு மாநில அறிவியல் தொழில்நுட்ப கழகம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், தேசிய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும் ஊக்கத்தொகை வழங்குகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆய்வு கட்டுரைகள்

இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, கலந்துரையாடல் நடந்தது. ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நினைவு மலரை கட்டிடவியல் துறை தலைவர் தமிழரசனும், குறுந்தகட்டை மின் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் மணிமாலாவும் வெளியிட்டனர். அதனை தூத்துக் குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி கட்டிடவியல் துறை உதவி பேராசிரியர் வெங்கடேசன் பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு பொறியியல் பிரிவிலும் சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,500, 2-வது பரிசாக ரூ.1,500, 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. கணினி அறிவியல் துறை பேராசிரியர் சரவணகுமார் நன்றி கூறினார்.