பள்ளிப்பட்டு, காக்களூரில் இன்று மின்தடை


பள்ளிப்பட்டு, காக்களூரில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 3 Feb 2018 3:28 AM IST (Updated: 3 Feb 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கொளத்தூர், அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொம்மராஜூபேட்டை பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பள்ளிப்பட்டு, கொளத்தூர், சொரக்காய்பேட்டை, கரிம்பேடு, புண்ணியம், பொதட்டூர்பேட்டை, பொம்மராஜூப்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, கர்லம்பாக்கம், நொச்சிலி, வடகுப்பம், குமாரராஜுப்பேட்டை, சானாகுப்பம், வெளியகரம் உள்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காக்களூர், சிட்கோ, ஆஞ்சநேயபுரம், திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story