மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை செய்துமனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸ்காரர் கைது + "||" + Dowry torture is done Spouse to commit suicide Police arrested

வரதட்சணை கொடுமை செய்துமனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸ்காரர் கைது

வரதட்சணை கொடுமை செய்துமனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸ்காரர் கைது
வரதட்சணை கொடுமை செய்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
வசாய்,

வரதட்சணை கொடுமை செய்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

வரதட்சணை கொடுமை

பால்கர் மாவட்டம் தகானுவை சேர்ந்தவர் சுனில்(வயது34). இவர் கோல்வட் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சியாமள்(23). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 மற்றும் 1 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.


இந்தநிலையில், ஒரு கார், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் என கூடுதல் வரதட்சணை கேட்டு சியாமளை, சுனில் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ்காரர் கைது

இதனால் மனமுடைந்த சியாமள் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, வீட்டில் இருந்த சுனில் மனைவி தூக்கில் தொங்கி பிணமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சியாமளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுனிலுக்கு எதிராக சியாமளின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சியாமளை தற்கொலைக்கு தூண்டியதாக சுனில் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.