மாவட்ட செய்திகள்

நாற்கர சாலை பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு + "||" + Nair road work is reviewed by Minister of State for Railways Ponnathirakrishnan

நாற்கர சாலை பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு

நாற்கர சாலை பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு
ஆரல்வாய்மொழி அருகே தங்க நாற்கரசாலை பணியை மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
ஆரல்வாய்மொழி,

காவல் கிணறு முதல் பார்வதிபுரம் வரை தங்க நாற்கரசாலை பணி நடந்து வருகிறது. ஆரல்வாய்மொழி அருகே ஒரு பகுதியில் நேற்று காங்கிரீட் போடும் பணி நடந்தது. அந்த பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு பணியை துரிதப்படுத்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.


அப்போது, அந்த பகுதியில் உள்ள செங்கல்சூளை உரிமையாளர்களும், விவசாயிகளும் மத்திய மந்திரியிடம் சென்று, சாலை பணி நடைபெறுவதால் செங்கல்சூளைக்கும், விவசாய தோப்புகளுக்கும் செல்ல முடியவில்லை என்றும், எனவே, சாலை பணி முடியும் வரை தற்காலிக பாதை அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், தற்காலிக பாதை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், காவல் கிணறு–பார்வதிபுரம் சாலை பணி வருகிற ஜூன் மாதம் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அவருடன், பா.ஜனதா மாநில பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், ஒன்றிய பா.ஜனதா தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய பிரசார அணி தலைவர் இசக்கி முத்து, ஆரல்வாய்மொழி பா.ஜனதா தலைவர் மாதேவன் பிள்ளை உள்பட பலர் உடனிருந்தனர்.