அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு


அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2018 4:30 AM IST (Updated: 4 Feb 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

சின்ன காஞ்சீபுரத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

சின்ன காஞ்சீபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்தில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் பா.பென்ஜமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, காஞ்சீபுரம் எம்.பி. கே.மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி.ஜீவானந்தம், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், நகர செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் சி.வி.எம்.அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் இ.வளையாபதி தலைமையில் ஏராளமான ம.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அண்ணா நினைவு நாளையொட்டி பொன்னேரியில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கூட்டுறவு சங்க தலைவர் பானுபிரசாத், இயக்குனர் பொன்னுதுரை, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மோகனவடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story