மேட்டுப்பாளையம்- கல்லார் இடையே பழமையான நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் சுற்றுலா ரெயில் இயக்க முடிவு
மேட்டுப்பாளையம்- கல்லார் இடையே பழமையான நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் சுற்றுலா ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மலை ரெயில் இயக்கப்படுகிறது. நீலகிரி மலை ரெயில் யுனெஸ்கோ நிறுவனத்தின் பாரம்பரிய அந்தஸ்து பெற்றதாகும். ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளிமாநில பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இயற்கை அழகை ரசித்தபடி பயணம் செய்யவே மலை ரெயிலில் செல்கிறார்கள். தற்போது குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது. அதன் பின் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் மூலம் ரெயில் இயக்கப்படுகிறது.
முன்பு நிலக்கரி நீராவி என்ஜின் மூலமே மலை ரெயில் இயக்கப்பட்டது. 1914-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் முதல் நிலக்கரி நீராவி என்ஜின் உருவாக்கப்பட்டது. இந்த நீராவி என்ஜின் 1918-ம் ஆண்டு இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன் பின்னர் 2002-ம் ஆண்டு பர்னஸ் ஆயில் மூலம் நீராவி என்ஜின் உருமாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 1914-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நீராவி என்ஜின் குன்னூர் லோகோ பணிமனையில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே மலை ரெயில் ஆர்வலர்கள் நிலக்கரி நீராவி என்ஜினை பாரம்பரியம் கருதி மீண்டும் இயக்க வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை ரெயில்வே வாரியம் ஏற்றுக்கொண்டு 1914-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜினை இயக்க அனுமதி வழங்கியது.
இதையடுத்து குன்னூர் லோகோ பணிமனையில் இந்த நிலக்கரி நீராவி என்ஜின் பராமரிப்பு பணி கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் வந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு மீண்டும் என்ஜின் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக நிலக்கரி நீராவி என்ஜினை, பர்னஸ் நீராவி என்ஜினுடன் இணைத்து மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. குன்னூரில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மதியம் 1 மணி அளவில் என்ஜின் வந்து சேர்ந்தது.
இந்த நிலக்கரி நீராவி என்ஜின் முழுமையாக பராமரிக்கப்பட்டு வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இது சுற்றுலா பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். நிலக்கரி நீராவி என்ஜினில் பெட்டிகள் இணைக்கப்பட்டு மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு வரை சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது.
இதன் மூலம் சுற்றுலா பயணிகள் பயன்பெறுவது மட்டுமின்றி ரெயில்வே துறைக்கும் வருவாய் கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர்.

Related Tags :
Next Story