கூடலூர் அருகே கிராமங்களுக்குள் நுழைந்த காட்டு யானை, பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு
கூடலூர் அருகே கிராமங்களுக்குள் நுழைந்த காட்டு யானை பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை காலம் தொடங்கி விட்டதால் நீர்நிலைகள் வறண்டு விட்டன. மேலும் முதுமலை, கூடலூர் வனங்களிலும் வறட்சியான காலநிலை நிலவுவதால் புற்கள் காய்ந்து விட்டது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்கள், விவசாயிகளுக்கு இடையூறு செய்து வருகிறது.
கூடலூர் செம்பாலா, எம்.ஜி.ஆர். நகர், ஈட்டிமூலா, திருவள்ளுவர் நகர், ஆனைசெத்தக்கொல்லி, அம்பலக்காடு உள்ளிட்ட பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்தன. மேலும் பட்டப்பகலில் 6 வீடுகளை உடைத்து சேதப் படுத்தின.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைக்கு பிறகு முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 2 கும்கி யானைகளை வனத்துறையினர் கொண்டு வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் காட்டு யானைகள் நடமாட்டம் குறைந்தது.
இதையடுத்து செம்பாலா பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த சரக்கு வாகனத்தை பள்ளத்தில் தள்ளி விட்டு சென்றது. இதனால் வனத்துறையினர், பொதுமக்கள் இணைந்து காட்டு யானையை விரட்டியடித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி அம்பலமூலாவில் இருந்து சேமுண்டி, கம்மாத்தி கிராமங்களுக்குள் காட்டு யானை நடந்து சென்றது. இதனால் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள், கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் கூடலூர் தொரப்பள்ளி அருகே உள்ள குனில் கிராமத்துக்குள் புகுந்து முகாமிட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே கூடலூர் அருகே தருமகிரி பகுதிக்குள் காட்டு யானை நேற்று மாலை 3 மணிக்கு நுழைந்தது. பின்னர் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தியது. இதை பார்த்த கிராம மக்கள் காட்டு யானையை விரட்டினர். இதனால் யானை பாலவாடி, கெவிப்பாரா கிராமங்களுக்குள் புகுந்தது.
தகவல் அறிந்த கூடலூர், ஓவேலி வன காப்பாளர்கள் பிரகாஷ், பாலசுப்பிரமணி, மோகன்ராஜ், வன காவலர்கள் மணிகண்டன், மணி, வேட்டை தடுப்பு காவலர் மணி உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டு யானை கிராமமக்களை துரத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பல இடங்களில் கிராம மக்கள் தீ மூட்டினர். மேலும் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டினர். பின்னர் காட்டு யானை கெவிப்பாரா காபி தோட்டத்துக்குள் இரவு 7 மணிக்கு புகுந்தது. இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். காட்டு யானைகளின் தொடர் வருகையால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Related Tags :
Next Story