தூத்துக்குடியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
தூத்துக்குடியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவன்-மனைவி
தூத்துக்குடி மீனாட்சிபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவருடைய மனைவி சின்னக்கனி (வயது 70). இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன்கள் அனைவரும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். மகள் தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயபாண்டியன் இறந்து விட்டார். இதனால் சின்னக்கனி மனமுடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலையில் சின்னக்கனி வீட்டின் கதவு திறந்து கிடந்தது. ஆனால் வெகுநேரம் ஆகியும் சின்னக்கனி வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு சின்னக்கனி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சின்னக்கனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story