முத்ரா திட்டத்தின்கீழ் சிறுவணிகர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம், கலெக்டர் தகவல்
சிறு வணிகர்கள் முத்ரா திட்டத்தின்கீழ் வங்கிகளில் கடன் உதவி பெற்று பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முத்ரா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் தொடர்பாக வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:- மத்திய அரசு, மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் சிறு தொழில் செய்யும் நபர்களுக்கு பிணையம் இல்லாமல் எளிதில் கடன் உதவி பெற்று பயனடையும் வகையில் முத்ரா திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் சிறு வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சிசு திட்டம், கிஷோர் திட்டம், தருண் திட்டம் என 3 விதமாக பிணையம் ஏதுமின்றி கடன் உதவி வழங்க வழிவகை செய்யப்பட்டுஉள்ளது.
குறிப்பாக சிசு திட்டத்தின்கீழ் ரூ.50,000 வரையிலும், கிஷோர் திட்டத்தின்கீழ் ரூ.50,000-க்கு மேல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலும் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 55 வயது வரை உள்ள நபர்கள் தகுதியானவர்கள். கல்வித்தகுதி கட்டாயமில்லை. சிறு தொழில் செய்து வரும் நபர்கள் தொழிலை விரிவுப்படுத்துவதற்காகவும், புதிதாக சிறு தொழில் தொடங்க விரும்பும் நபர்களும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய அரசு அலுவலகங்களிலும், அனைத்து வங்கிகளிலும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, நிரந்தர வங்கி எண் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படங்கள் ஆகியவற்றை தாங்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ள வங்கிகள் அல்லது தங்கள் அருகில் உள்ள வங்கிகளில் சமர்ப்பித்து பயனடையலாம். பயனாளிகள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு அந்தந்த வங்கி கிளைகளில் அதற்கான ஒப்புகை ரசீதும் வழங்கப்படும்.
ஏழை, எளியோருக்கு பிணையம் ஏதுமின்றி கடன் உதவி வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தினை வங்கியாளர்கள் மேலும் சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் இடையே அதிகஅளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சியாமளாநாதன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மாரியம்மாள், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் ராஜா முகமது, குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story