சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பால கட்டுமான பணி ஏப்ரல் மாதம் தொடங்கும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தகவல்


சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பால கட்டுமான பணி ஏப்ரல் மாதம் தொடங்கும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2018 3:15 AM IST (Updated: 4 Feb 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் அமைக்கும்பணி ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் அமைக்க நகர் பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த நிலையில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான மேம்பால மாதிரி அமைப்பு மற்றும் வரைபடத்தினை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.யிடம் தென்காசி நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளர் கார்த்திக்குமார் விளக்கினார்.

சத்திரப்பட்டியில் ரெயில்வே மேம்பாலம் அமையவிருக்கும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

மத்திய அரசு நிதியாக ரூ.20 கோடி மாநில அரசு நிதியாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) இதற்கான டெண்டர் விடப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் பணி தொடங்கப்பட்டு விரைவில் மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு கூறினார்.

Next Story