தமிழக அரசின் மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் எடுக்க குவிந்த பெண்கள்


தமிழக அரசின் மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் எடுக்க குவிந்த பெண்கள்
x
தினத்தந்தி 4 Feb 2018 3:00 AM IST (Updated: 4 Feb 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்காக ஓட்டுனர் உரிமம் எடுக்க நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று பெண்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை,

தமிழக அரசின் மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்காக ஓட்டுனர் உரிமம் எடுக்க நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று பெண்கள் கூட்டம் அலைமோதியது.

மானிய விலை ஸ்கூட்டர்

தமிழக அரசு பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்கள் வழங்க இருக்கிறது. இதை வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும். இல்லை என்றால் எல்.எல்.ஆர். எனப்படும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு பதிவு செய்து, தற்காலிக ஓட்டுனர், பழகுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இதற்கான ஆவணத்தை இணைத்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவரின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதையொட்டி கடந்த சில நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி, வள்ளியூர், அம்பை, தென்காசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

பெண்கள் கூட்டம்


இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்த போதிலும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதையொட்டி நேற்று நெல்லையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அங்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுனர் உரிமம் எடுக்க பதிவு செய்தனர். நெல்லையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 250 பேர் பதிவு செய்தனர். இதேபோல் தென்காசி, அம்பை, வள்ளியூர் மற்றும் சங்கரன்கோவில் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுனர் உரிமம் எடுக்க ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று பதிவு செய்து, சான்றிதழை பெற்றுச் சென்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், “நெல்லை மாவட்டத்தில் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஓட்டுனர் உரிமம் எடுக்க பதிவு செய்து, பழகுனர் உரிமம் பெற்றுச் சென்றனர். நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஓட்டுனர் உரிமம் எடுக்க பதிவு செய்தனர். இவர்கள் 6 மாதங்களுக்குள் இருசக்கர வாகனத்தை ஓட்டி காண்பித்து நிரந்தர ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும். இதில் பெரும்பாலானோர் கியர் இல்லாத இருசக்கர மொபட் அல்லது ஸ்கூட்டரை ஓட்டி காட்டலாம். கியர் உள்ள வண்டிக்கு பதிவு செய்திருந்தால் மோட்டார் சைக்கிளை ஓட்டி காண்பிக்க வேண்டும்” என்றனர்.

Next Story