சங்கரன்கோவில் அருகே கார்-ஆட்டோ மோதல்; 5 பேர் காயம்


சங்கரன்கோவில் அருகே கார்-ஆட்டோ மோதல்; 5 பேர் காயம்
x
தினத்தந்தி 4 Feb 2018 2:00 AM IST (Updated: 4 Feb 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே கார்-ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே கார்-ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.

கார்-ஆட்டோ மோதல்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்த முத்துராஜ் (வயது 45), தெற்குப்புதூரை சேர்ந்த சுப்பிரமணியன் (36) ஆகிய இருவரும் நேற்று காலை ஆட்டோவில் வீரசிகாமணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

முத்துராஜ், ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அப்போது கடையநல்லூரில் இருந்து ஒரு கார், சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது.

நடுவக்குறிச்சி அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக காரும், ஆட்டோவும் மோதிக் கொண்டன. இதில் முத்துராஜ், சுப்பிரமணியன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை

காரில் இருந்த கடையநல்லூரை சேர்ந்த ஆத்திமுத்து (67), சதாம்உசேன் (27), முகம்மது ஹபிஸ் (32) ஆகிய 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த விபத்து குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story