நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா நினைவு நாளையொட்டி அவருடைய உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மலைக்கோட்டை,

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன் தலைமையில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சகாதேவ்பாண்டியன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாநகர செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் புறநகர் மாவட்ட பொறுப்பாளர் டி.டி.சி.சேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செயலாளர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் புதிய நீதி கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

துறையூரில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் வேம்பு ரெங்கராஜ், ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் துறையூர் நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் முரளி, மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நந்திகேஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் தாசில்தார் சந்திரகுமார், கோவில் நிர்வாக அதிகாரி ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டார்கள். லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சூப்பர் நடேசன் தலைமையில் அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பூவாளூர் நகர செயலாளர் ஜெயசீலன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.டி.எம்.அருண்நேரு மற்றும் கட்சியின் ஒன்றிய, நகர, ஊராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story