தேனியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு போலி அனுமதிச்சீட்டு மூலம் ஜல்லிக்கற்கள் கடத்தலா? அதிகாரிகள் விசாரணை


தேனியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு போலி அனுமதிச்சீட்டு மூலம் ஜல்லிக்கற்கள் கடத்தலா? அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 4 Feb 2018 3:15 AM IST (Updated: 4 Feb 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு போலி அனுமதிச்சீட்டு மூலம் ஜல்லிக்கற்கள் கடத்தப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் சில இடங்களில் கல்குவாரிகள் அனுமதி பெறாமல் செயல்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, தேனி வழியாக போலி அனுமதிச்சீட்டு மூலம் ஜல்லிக்கற்கள் வெளி மாவட்டங்களுக்கு கடத்திச் செல்லப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன.

இதில் அதிகாரிகளின் கையெப்பம், முத்திரை போன்றவை போலியாக இடப்பட்டு உள்ளதாகவும், சோதனை சாவடிகளில் போலீசாரை ஏமாற்றி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும் கூறப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டார். அதன்படி, உதவி இயக்குனர் சாம்பசிவம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘போடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டதாக புகார் வந்தது. அதன்படி அந்த தாலுகாவுக்கு உட்பட்ட பூதிப்புரம் பகுதியில் இருந்து போலி அனுமதிசீட்டின் மூலம் ஜல்லிக்கற்கள் எடுத்து செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து சோதனை நடத்தி, கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்படும்.

இதுதொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். 

Next Story