நெல்லையில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
நெல்லையில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
நெல்லை,

நஷ்டஈடு
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் துரைச்சாமியாபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, டிரைவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சிவகிரி அருகே வேனில் பயணம் செய்தார். அப்போது வேன் மீது அரசு பஸ் மோதியதில் கருப்பசாமி பலியானார்.
இதையடுத்து கருப்பசாமி குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு நெல்லை மோட்டார் வாகன விபத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கடந்த 22.6.2017 அன்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பிறகும் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதையடுத்து தீர்ப்பு நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன், சம்பந்தப்பட்ட மதுரை கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார். இந்த நிலையில் ஜப்தி நடவடிக்கைக்காக கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் வக்கீல் குட்டி என்ற வெங்கடாஜலபதி மற்றும் கருப்பசாமி குடும்பத்தினர் நேற்று நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். இதுபற்றி தகவல் வெளியானதால் மதுரை கோட்ட பஸ்களை, பஸ் நிலையத்துக்குள் வராமல் வெளியே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுச் சென்றனர்.
பஸ் ஜப்தி
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் நாகர்கோவிலில் இருந்து திருப்பூருக்கு செல்லும் மதுரை கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ் ஒன்று நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தது. அந்த பஸ்சை ஜப்தி செய்வதற்கான நோட்டீசை பஸ் கண்ணாடியில் கோர்ட்டு ஊழியர்கள் ஒட்டினர். இதன் பிறகு அந்த பஸ் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story