கூட்டேரிப்பட்டில் ரூ.103 கோடி கரும்பு நிலுவை தொகையை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கூட்டேரிப்பட்டில் ரூ.103 கோடி கரும்பு நிலுவை தொகையை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலம்,
முண்டியம்பாக்கத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு அரவை பருவத்தின் போது கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு இதுவரையில் நிலுவை தொகை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 103 கோடியே 26 லட்சம் நிலுவை தொகை ஆலையில் இருந்து வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.இந்த தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சர்க்கரை ஆலை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது வரையில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் இந்த தனியார் சர்க்கரை ஆலைக்கு சொந்தமாக உள்ள கரும்பு கோட்ட அலுவலகம் முன்பு விவசாயிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கரும்பு விவசாய சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.
அப்போது அவர்கள் கையில் கரும்புடன், நின்று சர்க்கரை ஆலை நிர்வாகம் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள், பின்னர் தானாகவே கலைந்து சென்றனர்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதம்(மார்ச்) 6-ந்தேதி முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, பழனி, பூங்காவனம், ரங்கசாமி, மாவட்ட தலைவர் சிவராமன், மாவட்ட செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story