நினைவுநாளையொட்டி அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


நினைவுநாளையொட்டி அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

நினைவுநாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூர்,

அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக பனகல் சாலை நகர கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு அண்ணா சிலையை அடைந்தனர். அங்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். அப்போது அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர பேரவை செயலாளர் கலியபெருமாள், கூட்டுறவு சங்க தலைவர் முத்துமாணிக்கம், மாவட்ட பிரதிநிதி தன்ராஜ், பாசறை தலைவர் சுரேஷ், நகர நிர்வாகிகள்் அருண்நடராஜன், ரயில்பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் வீரையன், மாவட்ட பொருளாளர் முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கார்்த்திகேயன், மாவட்ட விவசாய பிரிவு பொருளாளர் ராஜாங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேதுராமன், நகர மாணவரணி செயலாளர் பழனிவேல் உள்்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் நகர தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வாரைபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் சங்கர், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட சிறுப்பான்மை பிரிவு செயலாளர் தாஜ்தீன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அமுதாசேகர், மாவட்ட பிரதிநிதி அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலத்தில் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்திற்கு ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச்செயலாளர் ஆதி.ஜனகர், நகர செயலாளர் ஷாஜஹான், பேரூராட்சி முன்னாள் துணைத்தைலவர் செந்தமிழ்ச்செல்வன், சட்டமன்ற தொகுதி கழக இணைச்செயலாளர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீடாமங்கலம் பெரியார் சிலை பகுதியில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தஞ்சை சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியை அடைந்தனர். அங்கு அண்ணா சிலைக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. சித்தமல்லி சோமசுந்தரம் தலைமையிலும், முன்னாள் எம்.எல்.ஏ. ராசமாணிக்கம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் (வடக்கு) அண்ணாதுரை, (தெற்கு)மாயவநாதன், நகர தி.மு.க. செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையிலும் பெரியார் சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாகப்புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை சாலையில் உள்ள அண்ணா சிலையை அடைந்தனர். அங்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மன்னார்குடியில் அ.தி.மு.க. சார்பில் மன்னார்குடி ருக்மணிகுளம் சந்திப்பில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் மன்னார்குடி ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வம் (மேற்கு), தமிழ்கண்ணன் (கிழக்கு), மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்்னதாக அ.தி.மு.க.வினர் பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ருக்மணிகுளம் அண்ணா சிலையை வந்தடைந்தனர்.

குடவாசல் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பாப்பா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அ.தி.மு.க.வினர், அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குடவாசல் நகர தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் நகர விவசாய அணி அமைப்பாளர் முத்துபிள்ளை, ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் குணசேகரன், நகர பொருளாளர் ஆதித்யாபாலு, மாவட்ட பிரதிநிதி சேரன், நகர இலக்கிய அணி அமைப்பாளர் செந்தில், நகர சிறுபான்மை நலக்குழு அமைப்பாளர் பஷீர், நகர மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story