முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு தச்சு தொழிலாளி கைது


முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு தச்சு தொழிலாளி கைது
x
தினத்தந்தி 4 Feb 2018 3:45 AM IST (Updated: 4 Feb 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே எலுமிச்சங்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது30). இவருடைய உறவினர் பிரம்மன் கோவில் ரெங்கர் தெருவை சேர்ந்த சங்கர் மகன் முத்துக்குமார்(40). தச்சு தொழிலாளி. இவர்களுக்கு இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. முத்துக்குமாரின் மனைவி குடும்ப தகராறு காரணமாக கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் எலுமிச்சங்கா பாளையத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு முத்துக் குமார் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பிரகாஷ், முத்துக்குமாரிடம் அவரது மனைவி கோபித்து கொண்டு சென்றது குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், பிரகாசை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். 

Next Story