பராமரிப்பு பணிக்காக வாஷி கழிமுக பாலத்தின் ஒரு பாதை மூடப்பட்டது
பராமரிப்பு பணிக்காக வாஷி கழிமுக பாலத்தின் பன்வெல் - மும்பை பாதை மூடப்பட்டது.
மும்பை,

பராமரிப்பு பணி
மும்பை மற்றும் நவிமும்பையை இணைக்கும் வகையில் வாஷி கழிமுக பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினசரி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
கழிமுக பாலத்தில் சில பழுது நீக்கம் செய்யும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக அந்த பாலத்தின் பன்வெல் - மும்பை பாதை நேற்று மூடப்பட்டது.
அந்த வழியாக நவிமும்பையில் இருந்து மும்பை வரும் வாகனங்கள் மாற்றுபாதையில் திருப்பி விடப்பட்டன.
20 நாட்கள் வரை...
மும்பையில் இருந்து வாஷி, பன்வெல் செல்லும் இலகுரக வாகனங்கள் அங்குள்ள பழைய பாலம் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் பாலத்தின் ஒரு பாதை மூடப்பட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாஷி கழிமுக பாலத்தில் தொடர்ந்து 15 முதல் 20 நாட்கள் வரை அந்த பணிகள் நடைபெறும் என்றும், அதுவரையிலும் வாகனங்கள் மாற்றுபாதையில் தான் செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் கூறினர்.

Related Tags :
Next Story