விஜயேந்திரரை கண்டித்து தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


விஜயேந்திரரை கண்டித்து தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2018 3:12 AM IST (Updated: 4 Feb 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது கண்டித்து தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரி,

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் தமிழை அவமதித்து விட்டதாக கூறி அவருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்துள்ளன. தமிழகம், புதுச்சேரியில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அதன்படி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் அமுதவன் மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், தமிழர் களம் செயலாளர் அழகர், என்ஜினீயர் தேவதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story