அரசியல் தலையீடு வேண்டாமே!
‘ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்’ என்று பெண்ணின் பெருமையை தனது பாடல் வரிகள் மூலம் உணர்த்தியவர், பாரதியார். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
கிணற்றுத் தவளையாய் வீட்டுக்குள்ளேயே பெண்கள் முடங்கிக் கிடந்த காலம் மாறிப்போய், இன்றைக்கு ஆகாயத்து பறவைகளாய் வானின் எல்லையை அளக்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டி வந்தார். அவர்களின் நலன் காக்கும் நல்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்தார். அந்த வகையில், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பையும், அவர்கள் எளிதில் பணியிடங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாகவும் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாக்குறுதியாக அறிவித்தார். தேர்தலில் மகுடம் சூடியதும், மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை முதல் திட்டமாக செயல்படுத்த ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். ஆனால், அதற்குள் எதிர்பாராத வகையில் அவருடைய மரணம் நிகழ்ந்துவிட்டது.
தற்போது, அவர் விட்டு சென்ற பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார். அதன்படி, பெண்கள் மீது கரிசனம் காட்டிய ஜெயலலிதாவின் பிறந்த தினமான இம்மாதம் 24-ந்தேதியில் இருந்து இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பாக, தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், “கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125 சி.சி. எந்திர திறன் கொண்ட புதிய இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.20 ஆயிரம் பணம், இவை இரண்டில் எது குறைந்ததோ அது வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.200 கோடி செலவில், ஒரு லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது இருந்த விலையைவிட தற்போது ஸ்கூட்டரின் விலை அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தியபோது, “மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியத்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது” என்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மானிய விலை இருசக்கர வாகனம் பெற தகுதியுடைய பெண்கள் யார்? என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டது. அதில், “பெண்கள் வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழகத்தில் பணிபுரிபவராக இருக்க வேண்டும். இருசக்கர ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், 35 வயதை கடந்தும் திருமணமாகாத பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கு மண்டல அலுவலகங்கள், நகராட்சி-பேரூராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் இம்மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, வேலைக்கு செல்லும் பெண்கள் பலரும் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க ஆர்வத்துடன் விண்ணப்பிக்க கிளம்பினர். விண்ணப்பிக்கும் இடங்களில் எல்லாம் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பலரும் பணிக்கு விடுப்பு எடுத்துவிட்டு, காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
ஆனால், இதில் சில குளறுபடிகள் நடப்பதாக பெண்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காரணம், விண்ணப்பத்தை சரிபார்க்கும் அலுவலர்கள், ‘விண்ணப்பத்துடன் வழங்கப்படும் ஆவணங்களில் அது சரி இல்லை, இது சரி இல்லை’ என்று காரணம் காட்டி, பலரது விண்ணப்பங்களை வேண்டுமென்றே நிராகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சில இடங்களில் அரசியல் கட்சியினரும், இடைத்தரகர்களும் பணம் வசூலித்துக்கொண்டு, ‘இருசக்கர வாகனத்துக்கு நாங்க கியாரண்டி’ என்று பெண்களிடம் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. மேலும் அரசியல் பலம் வாய்ந்தவர்கள் கை காட்டும் நபர்களுக்கும் இருசக்கர வாகனம் வழங்கப்பட இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த ஆண்டு மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கு விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு நாளை (திங்கட்கிழமை) முடிவடைகிறது. விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் அரசு அறிவித்துள்ள, பிறப்பு சான்றிதழ், முகவரி சான்றிதழுக்காக வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் எண், வருமான சான்றிதழ், 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள கல்வி தகுதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மட்டும்), இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி போன்ற ஆவணங்களை மறக்காமல் எடுத்து சென்று அளிக்க வேண்டும்.
ஏழை-எளிய, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுத்தும் இந்த உன்னத திட்டம் உரிய பயனாளிகளை சேர வேண்டும். ஆனால், இதிலும் சில புல்லுருவிகள் தலையிட்டு, திட்டத்தை சிதைக்கும் வகையில் நடந்துகொள்வதை அரசும் வேடிக்கை பார்க்கக்கூடாது. முறைகேடுகளை தவிர்த்து முறையான பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் கிடைக்கச் செய்வதன் மூலம் உழைக்கும் பெண்களுக்கு உதவ வேண்டும். எனவே, தகுதியான பெண்களுக்கு தான் மானிய விலையிலான இருசக்கர வாகனம் கிடைக்கிறதா? என்பதை அரசு தனிக்கவனத்துடன் ஆராய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒலிக்கிறது.
-ஈ.ஆர்.பெருமாள்

Related Tags :
Next Story