2–வது நாளாக கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரியில் 2–வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி,
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தையும், மற்றொரு பாறையில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்வையிடுவார்கள்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும். கடலில் சூறாவளி காற்று, கடல் சீற்றம், கொந்தளிப்பு போன்ற இயற்கை மாற்றங்கள் வரும் போது படகு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்.
தற்போது, கன்னியாகுமரியில் அடிக்கடி கடல் உள்வாங்குதல், கடல் நீர் மட்டம் உயர்வு, சூறாவளி காற்று வீசுதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால், படகு போக்குவரத்து அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் படகு போக்குவரத்து தொடங்கியதும் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், படகு போக்குவரத்து மதியம் வரை நிறுத்தி வைக்கப்பட்டது. மதியத்திற்கு பின்பு படகுகள் மீண்டும் இயக்கப்பட்டன.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் படகுதுறையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
காலை 9.45 மணியளவில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து ஒன்றன் பின் ஒன்றாக கரையை நோக்கி வந்த வண்ணம் இருந்தன. இதனால், படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அத்துடன், விவேகானந்தர் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் அவசரம், அவசரமாக படகுகள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், மதியம் 2 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது.
2–வது நாளாக கடல் சீற்றம் காரணமாக முக்கடல் சங்கம கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். யாரும் கடலில் இறங்காமல் இருக்க போலீசார் ரோந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story