‘‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்’’ சுப்பிரமணியசுவாமி பேச்சு
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என சுப்பிரமணியசுவாமி எம்.பி. கூறினார்.
தென்காசி,
நெல்லை தெற்கு மாவட்ட விராத் இந்துஸ்தான் சங்கத்தின்(வி.எச்.எஸ்.), ஹிந்து ஆலய விழிப்புணர்வு இயக்கம் சார்பில் முதலாவது மாவட்ட மாநாடு நேற்று தென்காசியில் நடந்தது. மாநாட்டுக்கு இயக்க தலைவர் துரை தம்புராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராசன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் குமரேசசீனிவாசன், பி.எம்.எஸ். மாவட்ட பொருளாளர் பாடாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ் வரவேற்று பேசினார். குற்றாலம் விவேகானந்த ஆசிரம நிர்வாகி அகிலானந்த சுவாமி தொடக்க உரை நிகழ்த்தினார்.
இந்த மாநாட்டில் பா.ஜ.க. வை சேர்ந்த சுப்பிரமணியசுவாமி, எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:–
ஒரு காலத்தில் இந்தியாவில் 100 சதவீதம் இந்துக்களாக இருந்தனர். 1947–ல் வெள்ளையர்களால் சட்டம் இயற்றப்பட்டது. பாகிஸ்தானை முஸ்லிம்கள் நாடாகவும், இந்தியாவை இந்துக்கள் நாடாகவும் இருக்க சட்டம் இயற்றப்பட்டது. 1948–ம் ஆண்டு இந்தியாவில் முஸ்லிம்கள் இருப்பதற்கு பாராளுமன்றத்தில் நன்றி சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, எவ்வளவு மதமாற்ற அநீதிகள் நடந்தாலும், இன்னும் இந்தியாவில் 80 சதவீத இந்துக்கள் உள்ளனர்.
அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், அவர்கள் இஷ்டப்படி வாழ நாம் அனுமதி அளித்தோம். ஆனால், பல இடங்களில் வன்முறை நடக்கிறது. தென்காசியில்கூட 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இனிவரும் காலங்களில் அவ்வாறு நடக்காது. நமக்கும் எதிர்வழி தெரியும். இது காங்கிரஸ் ஆட்சி அல்ல. பா.ஜ.க ஆட்சி நடக்கிறது.
இனி இதுபோன்ற ஒரு சூழல் ஏற்படுமானால், இதை தடுக்க சிறப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யும். வெளிநாட்டில் உள்ள 5 சதவீத முஸ்லிம்கள்தான் தீவிரவாத இயக்கங்களை வளர்த்து வருகிறார்கள்.
இந்தியா பெரிய நாடாகி விடக்கூடாது என்பதற்காக இதை செய்கிறார்கள். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், ஆட்சிக்கு தலைமை ஏற்று நடத்துபவர் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி. வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றிபெற்று மீண்டும் நிச்சயமாக ஆட்சியை பிடிக்கும்.
கோவில் சொத்துக்களை ஆட்சி அதிகாரத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள், தங்கள் கைவசம் வைத்து கொண்டு, கோவில்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிச்சயமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். ராமர் பிறந்த பூமி அது. இதுகுறித்து புதிதாக உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்து உள்ளேன். அது நமது அடிப்படை உரிமை என கோரி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளேன். இந்துக்களின் சொத்து அது.
அம்பேத்கர் பெயரை சொல்லி சிலர் தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கலாசாரம் என்பது தான் அவருடைய கொள்கை. அது இந்து கலாசாரம் என்றார் அவர். நமது நாட்டில் ஆண்–பெண்களுக்கு சமஉரிமை உள்ளது. அதன் அடிப்படையில் தான், முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வி.எச்.எஸ். மாநில தலைவர் சந்திரலேகா, பா.ஜ.க. நகர செயலாளர் சங்கரசுப்பிரமணியன், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு தலைவர் குற்றாலநாதன், மாநில செயலாளர் ராஜமாணிக்கம், விஸ்வ இந்து பரிஷத் செயலாளர் தளவாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செங்கோட்டை பா.ஜ.க. நகர செயலாளர் வாசன் நன்றி கூறினார். முன்னதாக, தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Related Tags :
Next Story