மண்டபம் பகுதியில் கடல் உள் வாங்கியது; அரிய வகை கடல் உயிரினங்கள் இறந்து கிடந்தன
மண்டபம் பகுதியில் பல அடி தூரம் கடல் உள் வாங்கியது. இதனால் கடல் அட்டை, பவளப் பாறைகள் உள்ளிட்ட பல அரிய வகை கடல் உயிரினங்கள் இறந்து கிடந்தன.
பனைக்குளம்,
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு பல இடங்களில் கடல் உள் வாங்குவதும், கொந்தளிப்பாக காணப்படுவதும் அவ்வப்போது நடை பெற்று வருகின்றது. இதே போல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் கடற்கரை பகுதிகளிலும் அடிக்கடி கடல் உள் வாங்குகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பூங்காவிற்கும், பாம்பன் ரோடு பாலத்திற்கும் இடைப்பட்ட மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரம் வரையிலும் கடல் உள் வாங் கியது. இது வரை இல்லாத அளவிற்கு கடல் உள் வாங்கி காணப்பட்டதால் கடலில் வாழும் பல அரிய வகை கடல் அட்டைகள், சிறிய சிப்பிகள், சங்குகள் மற்றும் பல வகையான பவளப் பாறை உயிரினங்கள் இறந்த நிலையில் கடற்கரையில் கிடந்தன.
இது தவிர சுமார் 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமை ஒன்றும் இறந்த நிலையில் கடற்கரையில் கிடந்தது. கடல் உள் வாங்கியதை சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் வேடிக்கை பார்த்துச் சென்றனர்.
அடிக்கடி கடல் உள் வாங்குதலால் பல கடல் வாழ் உயிரினங்கள் இறந்து வருவது குறித்து கடல் சார் விஞ்ஞானிகளை கொண்டு ஆய்வு செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story