15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
சிவகங்கை,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது . மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ஆரோக்கியராஜ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜீவா ஆனந்தி, ரவி, ஜெயக்குமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் மாலா, அமலசேவியர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேச்சுவார்த்தையின்படி ஒத்துக்கொள்ளப்பட்ட மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் செய்ய வேண்டும்.
புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம், பதவி உயர்வு மற்றும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்குபின் அனுமதி வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகள் நிறைவேறும் வரை வருகிற 9-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக உதயமாகியுள்ள பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுக்களை அனைத்து ஒன்றியங்களிலும் ஏற்படுத்துவது, அதில் தனியார் பள்ளி, அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களையும் உறுப்பினர்களாக்குவது, சிவகங்கை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் ஒன்றியங்களில் ஏற்பட்டுள்ள வீட்டு வாடகை படி முரண்பாடுகளுக்கு தெளிவான அறிக்கையை மாவட்ட கலெக்டர் மாநில அரசிற்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story