கம்பம் எம்.எல்.ஏ.வை அழைப்பதற்கு வந்த போது கார் மீது லாரி மோதி போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி
கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.வை அழைத்து செல்ல திண்டுக்கல்லுக்கு வந்தபோது கார் மீது லாரி மோதி போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர்.
செம்பட்டி,
தேனி மாவட்டம், கம்பம் வரதராஜ நகரை சேர்ந்தவர் குமார் (வயது 29). இவர் தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையனுக்கு பாதுகாப்பு பணியில் அவர் நியமிக்கப்பட்டு இருந்தார். தேனி சிவாஜி நகரை சேர்ந்தவர் கண்ணையா (52). தேனி அரசு போக்குவரத்துக்கழக கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவர் கம்பம் எம்.எல்.ஏ.வின் நண்பர் ஆவார்.
நேற்று காலை சென்னையில் இருந்து ரெயில் மூலம் ஜக்கையன் எம்.எல்.ஏ. திண்டுக்கல்லுக்கு வந்தார். அவரை அழைத்து செல்வதற்காக கண்ணையாவும், குமாரும் ஒரு காரில் தேனியில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை கண்ணையா ஓட்டி வந்தார்.
குமுளி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை பிரிவு என்னுமிடத்தில் வந்தபோது, மத்திய பிரதேசத்தில் இருந்து வெள்ளைபூண்டு ஏற்றி கொண்டு தேனி வடுகப்பட்டி நோக்கி சென்ற லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. பின்னர் மோதிய வேகத்தில் கார் சாலையோர பள்ளத்தில் இறங்கி சிறிது தூரம் சென்று நின்றது. இதில் காரில் இருந்த கண்ணையாவும், குமாரும் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். திண்டுக்கல்லுக்கு வந்த ஜக்கையன் எம்.எல்.ஏ.வுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு அவர் விரைந்து வந்து பார்வையிட்டார்.
பலியான குமார், கண்ணையாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தராஜ் (40) என்பவர் மீது செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த போலீஸ்காரர் குமாருக்கு கண்மணி என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கண்ணை யாவுக்கு சுமதி என்ற மனைவியும், விக்னேஷ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

Related Tags :
Next Story