காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் குரல் கொடுத்தால் நல்லது - நடிகர் விஷால் பேட்டி
காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் குரல் கொடுத்தால் நல்லது என்று திண்டுக்கல்லில் நடிகர் விஷால் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டனர். வருகிற பொதுத்தேர்தலில் புது கட்சிகள் ஏராளமாக களம் இறங்கும். உள்ளாட்சி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் வரும்போது எல்லாவகையிலும் எனது அறிவிப்புகள் இருக்கும். வருகிற பொதுத்தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும்.
ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பயணத்தை உன்னிப்பாக கவனிப்பேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வரும் அனைவரையும் வரவேற்கிறேன். பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு எல்லாவகையிலும் நன்மை செய்தால் சந்தோஷமான வாக்காளராக நானும் இருப்பேன். காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி செயல்பட்டால் நல்லது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு மதிக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சட்டத்தை மீறி யாரும் செயல்பட முடியாது.
கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராடி வரும் விவசாயிகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மற்ற துறைகளுக்கு சலுகைகள் கொடுக்கும்போது, விவசாயிகளுக்கு ஏன் சலுகைகள் கொடுக்க முடியாது. காவிரிநீர் பிரச்சினையில் நடிகர்கள் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது. ஏன் குரல் கொடுக்கவில்லை என்று என்னால் கேட்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story