டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2018 3:15 AM IST (Updated: 5 Feb 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கோவை,

கோவை மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் கலியபெருமாள், செயலாளர் முருகேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்து கொள்ளும் அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் விலையை தினசரி உயர்த்தி கொண்டே போவதால் லாரி உரிமையாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறோம். டிரைவர்கள் பற்றாக்குறை, லோடுகள் குறைவு, டீசல் விலைஉயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரித்தொழில் நசிந்து வருகிறது. எனவே மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள தினசரி விலை நிர்ணயம் செய்து கொள்ளும் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லாரிகளுக்கான பிரீமியத்தொகையை உயர்த்துவதால் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அனைத்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story