பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எடியூரப்பா வீடு முற்றுகை; இளைஞர் காங்கிரசார் கைது


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எடியூரப்பா வீடு முற்றுகை; இளைஞர் காங்கிரசார் கைது
x
தினத்தந்தி 5 Feb 2018 2:45 AM IST (Updated: 5 Feb 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவமொக்காவில் உள்ள எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவமொக்காவில் உள்ள எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

எடியூரப்பா வீடு முற்றுகை


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று சிவமொக்கா டவுனில் உள்ள எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு திடீரென இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் இளைஞர் காங்கிரசார் கோஷங்கள் எழுப்பினர்.

கைது

இதுபற்றி அறிந்த சிவமொக்கா டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தை கைவிட மறுத்ததோடு, அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாரை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story