ரெயில்வேயில் 27 ஆயிரத்து 19 பணியிடங்கள்
மத்திய ரெயில்வே துறையில் 27 ஆயிரத்து 19 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள், பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரெயில்வே துறை. நாடு முழுவதும் பரந்த சேவையாற்றும் இந்த நிறுவனத்தில், வேலைவாய்ப்பை பெறுவது இளைஞர்களின் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டுதோறும் பல ஆயிரம் பணியிடங்களை ரெயில்வே துறை நிரப்பி வருகிறது. இந்த ஆண்டில் தற்போது 27 ஆயிரத்து 19 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணிக்கு 17 ஆயிரத்து 849 பேரும், டெக்னீசியன் பணிக்கு 9 ஆயிரத்து 170 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்தந்த ரெயில்வே மண்டலம் வாரியான காலியிட விவரம் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி யுடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
டெக்னீசியன் பணிக்கும் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அந்தந்த ரெயில்வே மண்டல இணையதள பக்கத்திற்குச் சென்று முழுமையான விவரங்களை படித்து அறியவும். பின்னர் தகுதியின் அடிப்படையில் விருப்பமான பணிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும். தமிழக பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு ரெயில்வே மண்டல விண்ணப்பதாரர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க 26-2-2018-ந் தேதி கடைசி நாளாகும்.
Related Tags :
Next Story