வேலூர் கோர்ட்டில் வேலை
வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பணியிடங்களுக்கு 77 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், ஸ்டெனோ டைப்பிஸ்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 77 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பி.சி. பிரிவினருக்கு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள, பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் படித்தவர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ஆகியோருக்கு பணிவாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி Principal District Judge, Principal District Court, Vellore632 009 என்ற முகவரிக்கு 12-2-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரங்களை http://ecourts.gov.in/india/tamil-nadu/vellore/recruitment என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story