சுப்ரீம் கோர்ட்டில் பணி


சுப்ரீம் கோர்ட்டில் பணி
x
தினத்தந்தி 5 Feb 2018 1:37 PM IST (Updated: 5 Feb 2018 1:37 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

ந்தியாவின் தலைமை நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட் அசிஸ்டன்ட் (டெக்னிக்கல் அசிஸ்டன்ட் கம் புரோகிராமர்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, கெஜட்டடு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 20-2-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://sci.nic.in/recruitment என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story