வனத்துறையில் பணி
ஜூவாலஜிகல் சர்வே ஆப் இந்தியா நிறுவனத்தில் ஜே.ஆர்.எப்., ஜே.ஆர்.ஏ. போன்ற பணிகளுக்கு 33 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் செயல்படுகிறது ஜூவாலஜிகல் சர்வே ஆப் இந்தியா எனப்படும் வனஉயிரி கணக்கெடுப்பு நிறுவனம். கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது ஆர்.ஏ., ஜே.ஆர்.எப்., ஜே.ஆர்.ஏ. போன்ற பணிகளுக்கு 33 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். உயிரியல், வாழ்க்கை அறிவியல், வனவாழ்வியல், சுற்றுச்சூழல் அறிவியல், பயோடைவர்சிட்டி, ஜியோ இன்பர்மேடிக்ஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்பு, பி.எச்.டி. படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. சில பணிகளுக்கு பட்டதாரிகளும் சேர்க்கப்படுகிறார்கள். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
15-2-18-ந் தேதிக்குள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம் சென்றடையும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரத்தை www.zsi.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story