அனைத்துக்கும் ஒரே சார்ஜர் கருவி


அனைத்துக்கும் ஒரே சார்ஜர் கருவி
x
தினத்தந்தி 5 Feb 2018 3:47 PM IST (Updated: 5 Feb 2018 3:47 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளுக்குமான பொதுவான சார்ஜர் கருவியாகவும் அறிமுகமாகி உள்ளது ஹைபர் டிரைவ்.

ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் எண்ணிக்கை வீடுகளில் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றுக்குப் போதுமான அளவில் சார்ஜ் ஏற்ற வீட்டில் ‘சுவிட்ச் பாயிண்ட்’ இணைப்புகள் இல்லாமல் இருக்கலாம். அந்த நெருக்கடியைத் தவிர்க்கவும், அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளுக்குமான பொதுவான சார்ஜர் கருவியாகவும் அறிமுகமாகி உள்ளது ஹைபர் டிரைவ். இதில் ஸ்மார்ட்போனை சுவிட்ச் இணைப்பின்றி சார்ஜ் செய்யலாம். மேலும் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட 8 எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்களை இணைத்து சார்ஜ் செய்ய முடியும். மெமரிகார்டுகளை இணைத்து டேட்டாக்களை டிரான்ஸ்பர் செய்யவும் முடியும். அமெரிக்காவின் கிக்ஸ்டார்ட்டர் நிறுவனம் விற்பனை செய்யும் இந்த சாதனத்தின் விலை 109 அமெரிக்க டாலர்கள்.

Next Story