வீட்டிலேயே கார் பேட்டரி சார்ஜிங் நிலையம்
வீடுகளில் பேட்டரி சக்தியை சேமிக்கும் நவீன திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.
முன்னணி கார் நிறுவனங்களான பென்ஸ், ரெனால்ட், டெஸ்லா ஆகியவை எதிர்கால வாகனங்களான எலக்ட்ரிக் கார்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதற்காக வீடுகளில் பேட்டரி சக்தியை சேமிக்கும் நவீன திட்டங்களையும் வகுத்து வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது நிசான் நிறுவனமும் இங்கிலாந்தில் வீடுகளில் சூரியசக்தியை சேமித்து எலக்ட்ரிக் வாகனங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நவீன திட்டத்தை விரிவுபடுத்தத் தொடங்கி உள்ளது.
இதற்காக சூரியசக்தி தகடுகளை நிறுவிக் கொள்ளும் வீடுகளுக்கு, தங்களுக்குப் போதுமான மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளவும், கூடுதல் மின்சாரத்தை வாகனங்களின் தேவைக்கு பயன்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன. வீடுகளின் வடிவமைப்புக்கு ஏற்ற வகையில் சூரியசக்தி தகடுகளை தயாரித்து பொருத்துகிறார்கள். இந்தத் திட்டம் 66 சதவீத இங்கிலாந்து மக்களின் மின் கட்டணச் செலவை முற்றிலும் குறைத்துவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்தத் திட்டத்திற்கு மக்களிடமும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
Related Tags :
Next Story