‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
‘நீட்‘ தேர்வை ரத்து செய்யக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘நீட்‘ தேர்வால் கிராமப்புற மாணவ–மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே ‘நீட்‘ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தி.க., மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தி.க. மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்னேஸ்வரி வரவேற்றார். மண்டல செயலாளர் வெற்றி வேந்தன், துணை தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், நகர செயலாளர் மகேஷ், பெர்னார்டு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story