கோவில்களில் கடைகள் வைக்க அனுமதிக்க கூடாது
கோவில்களில் கடைகள் வைக்க அனுமதிக்க கூடாது, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் சிவகாசி திலகபாமாவலியுறுத்தல்.
சிவகாசி,
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் சிவகாசி திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாதாரண துணிக்கடையில் கூட தீ விபத்து ஏற்பட்டால் அலாரம் அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொழில்நுட்பங்கள் தற்போது இருக்கிறது. ஆனால் சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ முழுவதும் பரவிய பின்னரே விபத்து குறித்து தெரிந்துள்ளது. 2 ஆயிரம் வருடத்துக்கு முன்னர் உள்ள சிற்பங்கள் கொண்ட மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்ததை இந்த நிகழ்வு உணர்த்தி இருக்கிறது. கோவிலின் உள்ளே பெரும் பகுதி வணிக மையங்களாக மாற்றப்பட்டதே தீ விபத்து பெரிய அளவிற்கு ஏற்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் கோவில்கள் வணிக மையங்களாக மாற்றப்படக்கூடாது. இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் பலி இல்லை. இதே விபத்து பகல் நேரத்தில் நடந்து இருந்தால் பக்தர்கள் நிலை என்ன? தீ விபத்தில் உடமைகளை இழந்த கடைக்காரர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இது போன்ற தீ விபத்துகள் இனி வரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story